கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மாதுளை செய்கையின் அறுவடை – ஆளுநர் கலந்துகொண்டார்

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைக்கவேண்டுமாக இருந்தால் கொள்வனவில் போட்டித்தன்மை தேவை. அவ்வாறான போட்டித்தன்மையான கொள்வனவை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக விவசாயமும் வருமானம் கூடிய துறையாக மாறும் என்ற நம்பிக்கையிருக்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பிரதேச செயலர் பிரிவில்இ விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் ரெட் ஏஞ்ஜல் அக்ரோ லிமிட்டட் விவசாய கம்பனி உருவாக்கப்பட்டு அதன் கீழ் மேற்கொள்ளப்பட்ட மாதுளைச் செய்கையின் அறுவடை விழா  நடைபெற்றது.


2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் 150 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 420 மாதுளம் கன்றுகள் வழங்கப்பட்டன. அத்துடன் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன. பாரம்பரிய முறையில்லல்லாது நவீன முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முதலாவது அறுவடையே இன்று நடைபெற்றது. ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஆரம்பத்தில் 10 கிலோ மாதுளை அறுவடை எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் இலங்கையில் வளம் கூடியதும் வறுமை கூடியதுமான மாகாணம் எமது மாகாணம்தான். வளங்களை உரிய முறையில் பயன்படுத்தாமையால் வறுமையிலும் முன்னிலையில் இருக்கின்றோம்.


விவசாயிகள் நவீன முறையிலான பயிர்ச்செய்கை முறைமைக்கு மாறவேண்டும். அதன் ஊடாகவே வர்த்தக நோக்கிலான அறுவடையையும் பெற்றுக் கொள்ள முடியும். விவசாயிகளின் வருவாயும் கூடும்.
இந்தத் திட்டம் வெற்றியளிக்காது என்று விலகிச் சென்ற விவசாயிகள் உங்களின் செயற்பாடுகளைப் பார்த்து தாம் ஏன் விலகிச் சென்றோம் என்று நினைக்கவேண்டும். இன்னும் பலரை இணைத்து இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடத்திச் செல்லவேண்டும் என்றார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத்த மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி