இலங்கை பங்களாதேஸ் நேபாளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டமைக்கு மோசமான ஆட்சிகளே காரணம் என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவல் தெரிவித்துள்ளார்.
பொருளாதார தோல்விகள்,உணவு தண்ணீர் பற்றாக்குறை,பணவீக்கம் ஒடுக்குமுறை வரிகள் சமூகமோதல்கள் ஆகியவையே அரசாங்கங்களின் தோல்விகளிற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சிகள் தேசங்களையும் வலுவான அரசுகளையும் உருவாக்குகின்றன என தெரிவித்துள்ள அஜித்டோவல் நிறுவனங்களை உருவாக்கிநிலைநிறுத்தும் மக்களின் பங்களிப்பை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.
வலுவாக்கப்பட்ட இலட்சியமுள்ள சமானிய மனிதர்கள் தற்போது நிர்வாகத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றனர்,என குறிப்பிட்டுள்ள அவர் தேசிய வளர்ச்சி ஸ்திரதன்மை உள்புற மற்றும் வெளிப்புற சவால்களை தடுப்பதற்;கு வலுவான நிறுவனங்களை உருவாக்கி பராமரிப்பது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
