வெனிசுலா மீது சமீபத்தில் நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக உள்ளூர் எரிபொருள் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
உள்நாட்டு எரிபொருள் விலையில் ஏற்படும் துல்லியமான தாக்கத்தை அரசாங்கத்தினால் தற்போது கணிக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார். “தற்போதைய நிலையில், சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் மாற்றங்களை நாங்கள் அவதானித்து வருகிறோம்,” என்று அமைச்சர் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
அவரது கூற்றுப்படி, மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நிதி அமைச்சும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் உரிய முடிவுகளை எடுப்பார்கள்.
