பிரதமரை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரம் – தனிப்பட்ட தாக்குதல்கள் – கல்விமான்கள் சிவில்சமூகத்தினர் கூட்டாக கண்டனம்

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவை இலக்கு வைத்து நடத்தப்படும் வன்மமான அவதூறு பிரச்சாரம் மற்றும் தனிப்பட்ட ரீதியிலான தாக்குதல்களை கல்வியாளர்கள்,  மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் குழுவொன்று வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக 58 பேரினால் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தத் தாக்குதல்கள் ஒரு ஜனநாயக சமூகத்தின் நாகரிகம் மற்றும் கண்ணியத்தின் அனைத்து எல்லைகளையும் மீறியுள்ளன. தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் மதிக்கப்படும் ஒரு பெண் தலைவராக பிரதமர் அமரசூரிய விளங்குவதால், அவர் மீதான இந்த விரோதப் போக்கு பெரும்பாலும் பெண் வெறுப்பு (Misogyny), பொறாமை மற்றும் பகைமை ஆகியவற்றிலேயே வேரூன்றியுள்ளது.

குறுகிய அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களைக்கொண்ட பிற்போக்கு சக்திகளால் பரப்பப்படும் இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இத்தகைய பிரச்சாரங்கள் அறநெறியுடன் கூடிய அரசியல் விவாதங்களை அபாயகரமாகச் சீரழிப்பதைக் காட்டுகின்றன.

கல்வி அமைச்சின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகத்தில் ஏற்பட்ட ஒரு தீவிரமான, ஆனால் தவிர்க்கக்கூடிய தவறு குறித்த செய்திகளைத் தொடர்ந்து அண்மைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், பிரதமருக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் இந்த அவதூறு பிரச்சாரங்கள் நியாயமான விமர்சனங்களைத் தாண்டி, அவரது கண்ணியம் மற்றும் ஆளுமையைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் முதல் பெண் பிரதமர் மற்றும் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கையின் பெண் தலைவர்கள், வரலாற்று ரீதியாகவே இத்தகைய பாலின ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இந்தத் தாக்குதல்களில் சில மதகுருமார்களும் இணைந்திருப்பது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

கொள்கை ரீதியான தோல்விகளைக் கேள்வி கேட்பதற்கும் அதிகாரிகளைப் பொறுப்புக்கூறச் செய்வதற்கும் ஜனநாயக ரீதியான உரிமை உள்ள அதேவேளை, பிரதமர் அமரசூரியவுக்கு எதிரான தனிப்பட்ட, பாலின ரீதியான மற்றும் ஒருதலைப்பட்சமான (Homophobic) தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; அவை ஜனநாயக நெறிமுறைகளைச் சீர்குலைக்கின்றன.

பாடப்புத்தகத் தவறை அரசாங்கம் ஒப்புக்கொண்டதையும், அது குறித்து பொலிஸ் விசாரணையை ஆரம்பித்திருப்பதையும் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையாக அவர்கள் வரவேற்றுள்ளனர்.

மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நாடாளுமன்ற நடத்தை, கண்ணியம், தைரியம், அரசியல் எதிரிகளுக்கு அவர் அளிக்கும் மரியாதை மற்றும் விவாதங்களில் அவரது அறிவுபூர்வமான பங்களிப்பு ஆகியவற்றையும் அந்த அறிக்கை பாராட்டியுள்ளது.

இத்தகைய தாக்குதல்கள் ஜனநாயக மற்றும் மனிதாபிமான விழுமியங்களை அரித்துச் சிதைக்கும் என எச்சரித்துள்ள அவர்கள், இந்தப் பிரச்சாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் உடனடியாக இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு