ஒரு பெண்ணாகத் தனியாகப் பயணம் செய்யும் போது நான் இங்கே உண்மையிலேயே பாதுகாப்பாக உணர்கிறேன்–இலங்கைக்கு சுற்றுலாபயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய பெண்ணிண் பதிவு

என்னைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என் பெயர் கெர்ரி (Kerry). நான் பிரித்தானியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவள், எனக்கு 52 வயதாகிறது. எனினும் எனது முதிர்ந்த காலத்தின் பெரும்பகுதியை ஆஸ்திரேலியாவிலேயே கழித்தேன்.

பயணம் செய்வதும், உண்மையான மற்றும் அர்த்தமுள்ள (wholesome & authentic) வாழ்க்கையை வாழ்வதுமே எனது விருப்பம். தற்போது நான் எனது அதிகப்படியான நேரத்தை இலங்கையில் செலவிடுகிறேன். நான் தனியாகப் பயணம் செய்பவள்; அதேசமயம் அமைதியான, ஆழமான மற்றும் கலாச்சார அனுபவங்கள் நிறைந்த பயணங்களை விரும்பும் ஏனைய பெண்களுக்கு நான் வழிகாட்டியாகவும் ஆதரவாகவும் இருக்கிறேன்.

என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி ‘பாதுகாப்பு’ பற்றியது. ஒரு பெண்ணாகத் தனியாகப் பயணம் செய்யும் போது, நான் இங்கே உண்மையிலேயே பாதுகாப்பாக உணர்கிறேன். இங்கிருப்பவர்கள் மிகவும் அன்பானவர்கள், மரியாதைக்குரியவர்கள்; அவர்கள் அமைதியான முறையில் பாதுகாப்பளிக்கக் கூடியவர்கள். நாம் பழகிய இடங்களை விட இங்கு வாழ்க்கை மிகவும் நிதானமாக நகர்கிறது. நான் எனது உள்ளுணர்வைக் கவனிப்பேன், போதிய முன்னெச்சரிக்கைகளை எடுப்பேன்; அதனால் இலங்கை எனக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை, மாறாக அது ஒரு நிம்மதியான இடமாகவே இருக்கிறது.

தற்போது நான், பெண்கள் மற்றும் யோகா/தியானப் பயிற்சி நடத்துபவர்களை, நம்பகமான உள்ளூர் மனிதர்களுடனும் இடங்களுடனும் இணைக்க உதவுகிறேன். இதன் மூலம் அவர்கள் எதையும் தனியாகக் கையாள வேண்டிய அவசியம் இல்லாமல், இலங்கைக்கு வந்திறங்கியவுடன் நிம்மதியாகத் தமது பயணத்தைத் தொடர முடியும்.

இலங்கையைப் பற்றியோ அல்லது வாழ்க்கையின் பிற்பகுதியில் தனியாகப் பயணம் செய்வது பற்றியோ உங்களுக்குத் தெரிய வேண்டுமென்றால், எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். தனியாகப் பயணம் செய்ய உங்களுக்குத் தயக்கம் இருந்தால், தயங்காமல் அதைச் செய்யுங்கள் என்றுதான் நான் சொல்வேன்!

இது என் வாழ்க்கையை மாற்றியுள்ளது, என்னைக் குணப்படுத்தியுள்ளது. இப்போது நான் வாழும் வாழ்க்கைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாகவும், பெருமையாகவும் உணர்கிறேன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்