வடமாகாணத்தின் சிறந்த தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” (Northern Entrepreneur Awards – 2025) நிகழ்வானது தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை (National Enterprise Development Authority – NEDA) மற்றும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் (Chamber of Commerce and Industries of Yarlpanam – CCIY) ஏற்பாட்டில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
வட மாகாணத்தின் தொழில்முனைவோருடைய திறன்கள், அவர்களின் புத்தாக்கங்கள், தலைமைத்துவம் மற்றும் பொருளாதார பங்களிப்புக்கள் போன்றவற்றை பாராட்டுவதோடு தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, சிறந்த தொழில்முனைவோரை தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்வதே இவ் விருதுகளின் பிரதான நோக்கமாகும். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்குரியது.
வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 இல் பெண் தொழில்முனைவோர், இளம் தொழில்முனைவோர், வேளாண்மை, உணவு சார் உற்பத்திகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, மீன்பிடி, கல்வி, ஏற்றுமதிகள், கட்டிட நிர்மாணம் மற்றும் உட்கட்டமைப்பு, கைவினை மற்றும் படைப்புத் துறை உள்ளிட்ட 16 பிரிவுகளில் மொத்தம் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
விருதுகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. தொழில்முனைவோர் தங்கள் துறையின் சாதனைகள், புதுமைகள் மற்றும் சமூக பங்களிப்புகள் போன்ற கோரப்பட்டுள்ள விபரங்களுடன் விண்ணப்பங்களை சமரடப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாள் 20-10-2025 .
மேலதிக தகவல்களுக்கும் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளவும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தினை (Chamber of Commerce and Industries of Yarlpanam – CCIY) தொடர்பு கொள்ளவும்.
முகவரி : இல 63, நல்லூர் குறுக்குத்தெரு, நல்லூர், யாழ்ப்பாணம்
மின்னஞ்சல் : info@cciy.லக்
தொலைபேசி இல. :070 366 3603 | 021 222 6608
