எங்கள் தாயகத்தை மீள கட்டியெழுப்புவதற்காக நாங்கள் ஒருங்கிணையவேண்டிய தருணம் இது என தெரிவித்துள்ள கனடாவின் டொரோண்டோ ஸ்காப்ரோ நகராட்சி உறுப்பினர் நீதன்ஷான்(Toronto Councillor Neethan Shan )போர்க்கால சூழலில் எங்கள் மக்கள் தங்களை எவ்வாறு இயக்கிக்கொண்டார்கள் அதிலிருந்து எவ்வாறு மீண்டார்கள் என்பது ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழர்களிற்கும் ஒரு பாடமாகயிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் டொறன்டோ பல்கலைகழகத்தில் அனைத்துலக தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறும் வடக்குமற்றும் கிழக்கின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சின்ன சின்ன விடயங்களிற்கே துவண்டு போகக்கூடிய நிலையில் உள்ள எங்களிற்கு அங்கு போகும்போது படிக்ககூடிய பல விடயங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கனடாவில் இருக்ககூடிய தமிழ் மக்களாகிய நாங்கள் உங்கள் எல்லோருடனும் இணைந்து இந்த மண்ணின் பூர்வீககுடிமக்களிற்கு எங்களுடைய சகோதரத்துவத்தை பகிர்ந்துகொண்டு ஆரம்பிக்கின்றோம்.
இந்த மண்ணிலும் ஒரு இன அழிப்பு இடம்பெற்றது இந்த மண்ணில் இருக்ககூடிய பூர்வீககுடிமக்கள் இன்றும் தங்கள் உரிமைக்காக போராடுகின்றார்கள் என்ற விடயம் எங்களில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கலாம்.
அந்த வகையில்எங்களது தாயகத்தில் இடம்பெற்ற விடயங்கள் அது சம்பந்தமாக எவ்வாறு புனர்வாழ்வு புனரமைப்பு போன்றவற்றை கட்டியெழுப்ப போகின்றோம் என்பதை பேசுகின்ற அதேவேளையில் இந்த மண்ணில் எங்களிற்கு இந்த இடத்தை வழங்கி அவர்களோடு இந்த இடத்தை பகிர்ந்து நாங்கள் இந்த மண்ணில் வெற்றியாளர்களாக சாதனையாளர்களாக பொருளாதார சமூக கலாச்சார வளர்ச்சியோடு பயணிப்பதற்கு ஆழமான அந்த பகிர்வை செய்த இந்த மண்ணிற்கு பூர்வீக குடிமக்களின் சகோதரத்துவத்தை பகிர்ந்துகொள்வது மட்டுமல்ல மாத்திரமல்ல அவர்களின் உரிமைகளிற்காக விடயங்கள் முன்வருகின்ற போது பாதிக்கப்பட்ட ஒரு இனமாக நாங்களும் அவர்களுடன் பயணிக்கவேண்டும் என்பதை ஆரம்பத்தில் கூறி;க்கொள்கின்றேன்.
இரண்டாவதாக இந்த வளர்ச்சி இந்த எங்கள் சமூகத்தில் புலம்பெயர்ந்த மண்ணில் வீழ்ச்சியிலிருந்து மீள் எழுச்சி பெறுகின்ற ஒரு சமூகமாக அடையாளப்படுத்தப்படுவதற்கு எங்களிற்கா தியாகம் செய்த எங்கள் சகோதர சகோதரிகளை நினைவுகூறுகின்றோம் அவர்களின் தியாகத்திலும் அவர்கள் செய்த அர்ப்பணிப்பிலும்தான் நாங்கள் இன்று ஒரு வளர்ச்சியான சமூகமாக ஓரு உத்வேகம் பெற்ற சமூகமாக காணப்படுகின்றோம் அடையாளப்படுத்தப்பட்ட சமூகமாக இருக்கின்றோம் என்பதனால் அவர்களை நினைவுகூறுகின்றோம்.
ஸ்கார்புரோ கனடாவின் பெரும்பான்மையான தமிழர்கள் வசிக்கும் பகுதி,பலர் இங்கிருந்து வேறு பகுதிகளிற்கு சென்றுவிட்டார்கள் ஆனால் இன்றும் தமிழ்மக்களின் கலாச்சார தளமாக ஸ்காபுரோ காணப்படுகின்றது.
இந்த மாதிரியான ஒரு ஆராய்ச்சி, உள்ளடக்கப்பட்ட பரவலாக உலக தமிழர்களை ஒருங்கிணைத்த ஒரு மாநாட்டின் தேவை என்பது பல வருடங்களிற்கு முன்பே இருந்திருந்தாலும்,இந்த முறை எல்லா இவ்வாறு துறையிலும் இருக்ககூடிய எல்லா நாடுகளிலும் இருக்ககூடிய மக்களை இணைத்து இவ்வாறான ஒரு விடயத்தை அனைத்துலக தமிழர் பேரவை செய்வது என்பதற்கு நாங்கள் நன்றிகளை கூறிக்கொள்கின்றோம்.
தலைமை தாங்கி முன்னெடுத்துவருகின்ற நிமால் விநாயகமூர்த்தி அவர்களிற்கு எனது நன்றி.
எங்கள் தாயகத்தை மீள கட்டியெழுப்புவதற்காக நாங்கள் ஒருங்கிணையவேண்டிய தருணம் இது.நாங்கள் இந்த விடயத்தில் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு எங்களிற்கு ஆதாரங்கள் எங்கள் மத்தியிலான கலந்துரையாடல்கள் அவசியம். கலந்துரையாடல்கள் என தெரிவிக்கும்போது தரமான கலந்துரையாடல்கள் அவசியம்.
நாங்கள் நல்லநோக்கத்துடன் செயற்படலாம் ஆனால் ஒரே தரப்பினருக்கும் நாங்கள் பணத்தை வழங்ககூடும், நேரடியாக தாக்கம் செலுத்தாத இடங்களிற்கு வழங்ககூடும்.
எங்கள் தாயகம் குறித்த முழுமையான பார்வை அவசியம்.எங்கள்கிராமங்கள் பாடசாலைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது அவசியம். ஏதோ ஒரு கட்டத்தில் அவர்களின் தேவை என்ன -மாற்றமடைந்து வரும் தேவை என்ன என்ற முழுமையான பார்வை அவசியம்.
ஆகவே இவ்வாறான கலந்துரையாடல்களும் மக்கள் மத்தியிலிருந்து வரும் குரல்களும் அவசியம்.
சிலவேளைகளில் நாங்கள் நினைப்பது இங்கிருந்து போற நாங்கள் அங்கிருக்கின்ற மக்களிற்கு உதவி செய்கின்றோம் என்று, இங்கிருந்து போற இளையவர்கள் நான் இவ்வாறு சொல்வதுண்டு நீங்கள் உதவி செய்கிறோம் என்று போவீர்கள் ஆனால் உங்களிற்குதான் நிறைய உதவி கிடைக்கும் ஏனென்றால் அந்த மக்களிடமிருந்து நிறையவே நாங்கள் படிக்ககூடியதாகயிருக்கும்.
போர்க்கால சூழலில் தங்களை எவ்வாறு இயக்கிக்கொண்டார்கள் அதிலிருந்து எவ்வாறு மீண்டார்கள் என்பது ஒவ்வொரு தமிழர்களிற்கும் புலம்பெயர்ந்து இருக்கின்ற ஒவ்வொரு தமிழர்களிற்கும் ஒரு பாடமாகயிருக்கின்றது.
சின்ன சின்ன விடயங்களிற்கே துவண்டு போகக்கூடிய நிலையில் உள்ள எங்களிற்கு அங்கு போகும்போது படிக்ககூடிய பல விடயங்கள் உள்ளன .
நாங்கள் ஐரோப்பாவை அடிப்படையாக கொண்ட காலனிய மனோநிலையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை – சிக்கிகொள்ளக்கூடாது.நன்கொடை மனோநிலை, எங்களிடம் எல்லாம் இருக்கின்றது நாங்கள் அங்கே சென்று கட்டியெழுப்பவேண்டு;ம் என்ற மனோநிலை.
எங்களிடம் சமூக நீதி மாற்ற மனோபான்மை அவசியம்,நாங்கள் அங்கு சென்று ஆதரவு தேவையானவர்களிற்கு ஆதரவை வழங்கவேண்டும் ஆனால் நாங்கள் கற்றுக்கொள்வதற்கான வெளிப்படையான மனோநிலை அவசியம்,
நாங்கள் செய்யும் எதுவும் துஸ்பிரயோகமாக மாறக்கூடாது.சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் செய்யக்கூடாது.
கனடாவில் நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் சூழல் பொருளாதார தராதரங்களை அங்கே நாங்கள் நடைமுறைப்படுத்தக்கூடாது.
நாங்கள் பாரம்பரியத்தை பேணவேண்டும்.கனடாவில் நாங்கள் 100 வருட கட்டிடத்தை பாரம்பரியமாக கருதுகின்றோம் தாயகத்தில் இதனை நாங்கள் அறிந்துகொள்ளவேண்டும் எது பாரம்பரியம் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
