இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள 17 பேர்கொண்ட அமெரிக்க முதலீட்டு குழுவினர் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான பொருத்தமான இடங்களை அடையாளம் காண்பதற்காக களவிஜயங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளதுடன் அமெரிக்க தூதுக்குழுவினர் அறுகம்குடா கொழும்பு திருகோணமலை போன்ற பகுதிகளிற்கு விஜயம் மேற்கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடு குறித்த அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து அமெரிக்கா கொண்டுள்ள கரிசனைகளை போக்குவதே இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்கா வெளியிட்டிருந்த அறிக்கையில் இலங்கையின் நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கொள்கை சீரற்றது என குறிப்பிட்டிருந்தது.
இந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கை முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான இலங்கை முதலீட்டு சபைஅரசுத் துறைகளில் துண்டு துண்டான அதிகாரம் காரணமாக “ஒரே இடத்தில்” செயல்பட போராடுகிறது இது சாத்தியமான முதலீட்டாளர்களை விரக்தியடையச் செய்யும் நீண்ட ஒப்புதல் செயல்முறைகளை உருவாக்குகிறது மேலும் தேவையற்ற விதிமுறைகள் சட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் மோசமான அதிகாரத்துவ எதிர்வினை ஆகியவை முக்கிய தடைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.என குறிப்பிட்டிருந்தது.
அவர்களின் கருத்துகளைக் கேட்டு நாட்டில் அமெரிக்க முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவில் என்ன மாற்றங்களைச் செய்ய முடியும் என்பதைப் பார்க்க விரும்புகிறோம். அதனால்தான் பிரதிநிதிகள் கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்பு மற்றும் திறமையான மனித வளம் உள்ளிட்ட பிற வசதிகளை தாங்களாகவே பார்க்கும்படி கள வருகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்
அமெரிக்கா முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படும் துறைகளில் ஐடி எல்என்ஜி மின்சாரம் மற்றும் எரிசக்தி பெட்ரோலியம் மற்றும் விவசாயம் ஆகியவை அடங்கும் என்று என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய பயப்படக்கூடாது என்றும் முதலீட்டாளர்களைப் பாதுகாக்கவும்இ செயல்முறையை விரைவுபடுத்தவும் வலுவான சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.