பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்தான பருவகால தாக்கங்கள் மற்றும் எரிசக்தி விலை உயர்வு காரணமாக, 2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சேவைத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கியினால் தொகுக்கப்படும் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (Purchasing Managers Index – PMI), முந்தைய மாதத்தின் 59.4 என்ற சுட்டெண்ணுடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் 46.7 என்ற மதிப்பை மட்டுமே பதிவு செய்துள்ளது.
பண்டங்களின் போக்குவரத்து, காப்புறுதி (insurance), மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், மற்றும் தங்குமிடம், உணவு மற்றும் பானங்கள் சார்ந்த சேவைத் தொழில்களில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக, 2026 ஏப்ரல் மாதத்தில் புதிய வணிகங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. 2023 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு புதிய வணிகங்களில் இத்தகைய வீழ்ச்சி பதிவாவது இதுவே முதல் முறை என இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
“முக்கியமாக எரிபொருள் விலை உயர்வு, பண்டிகைக் கால விடுமுறைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட மந்தநிலை ஆகியவற்றின் காரணமாக, இம்மாத்ததில் பெரும்பாலான துறைகளில் வணிகச் செயல்பாடுகள் சரிவைச் சந்தித்துள்ளன.”
பண்டங்களின் போக்குவரத்து மற்றும் இதர தனிநபர் சேவை சார்ந்த துணைத் துறைகள் மிகக் கடுமையான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ள அதேவேளையில், காப்புறுதி, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், மற்றும் தங்குமிடம், உணவு மற்றும் பானங்கள் சார்ந்த சேவைத் துறைகளும் குறிப்பிடத்தக்க சரிவைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
ஒப்பந்தக் காலாவதி, ஓய்வுபெறல் மற்றும் இராஜினாமாக்கள் காரணமாக வேலைவாய்ப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேநேரம், தேங்கிக் கிடக்கும் வேலைகளின் அளவும் (backlogs of work) தொடர்ந்து குறைந்து வருகிறது.
