புதிய கல்விசீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை கற்பித்தல் நேரம் இரண்டு மணிவரை நீடிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள கல்வியமைச்சின் செயலாளர் நாலக ஹலுவேவ மாணவர்களின் போக்குவரத்தினை கருத்தில்கொண்டு இது குறித்து போக்குவரத்து அமைச்சிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களிற்கான போக்குவரத்து குறித்து ஏற்கனவே சம்மந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஏற்கனவே அவசியமான தகவல்களை பரிமாறியுள்ளோம், 2026 முதல்முதலாம் தரம் ஆறாம் தர மாணவர்களிற்கான கற்பித்தல் இரண்டு மணிவரை நீடிக்கப்படும்,என அவர் தெரிவித்துள்ளார்.
