எரிபொருள் மானியம் குறித்து தீர்மானிப்பதற்கு முன்னர் உலகளாவிய போக்குகளை அரசாங்கம் கண்காணித்து வருகிறது – பிரதி அமைச்சர்

இலங்கை திட்டமிட்டபடி தனது தற்போதைய பொருளாதாரப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் என்பதில் அரசாங்கம் மிகவும் சாதகமான மற்றும் நம்பிக்கையான எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், முதலாவது காலாண்டின் 5.1% பொருளாதார வளர்ச்சி விகிதமானது, உள்ளடக்கிய மற்றும் நிலையான 7% பொருளாதார வளர்ச்சியை எட்டும் நடுத்தர கால இலக்கை நோக்கி நாடு எதிர்பார்த்த பாதையில் பயணிப்பதைக் காட்டுகிறது என்றார்.

இருப்பினும், இது 2026ஆம் ஆண்டில் இலங்கை 7% பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதைக் குறிக்கவில்லை என்றும், ஏனெனில் அது ஒரு நடுத்தர கால இலக்கு என்றும் அவர் தெளிவுபடுத்தினார். 5.1% மற்றும் 5.5% போன்ற படிப்படியான வளர்ச்சி மேம்பாடுகள், திட்டமிட்ட பொருளாதாரப் பாதையைத் தக்கவைத்துக் கொள்ள பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய பங்குதாரர்கள், அமைச்சுகள், நன்கொடை முகவர் அமைப்புகள், அபிவிருத்தி முகவர் அமைப்புகள் மற்றும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருடன் அரசாங்கம் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“நாங்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறோம். சில சமயங்களில் இந்தத் தகவல்கள் சமூகத்திற்குச் சரியாகச் சென்றடையாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் நாங்கள் இந்த விவாதங்களை நடத்தி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் வறுமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வருமான சமமின்மையைக் குறைக்கவும், ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் இந்த இலக்கை அடைவது அவசியமானது என கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

எரிபொருள் மானியம் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், வெளிநாட்டுச் சூழலால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் 100 பில்லியன் ரூபாய் பெறுமதியான குறிப்பிட்ட நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்தியதாகக் கூறினார்.

வெளிநாட்டுச் சூழலின் தாக்கம் மூன்று மாத காலத்திற்கு நீடிக்கும் என அரசாங்கம் மதிப்பிட்டிருந்ததால், அந்த மூன்று மாத காலத்திற்கு மானியங்கள், சலுகைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதே அரசாங்கத்தின் ஆரம்பத் திட்டமாக இருந்தது என அவர் கூறினார்.

நிச்சயமற்ற ஒரு வெளிநாட்டுக் காரணியை அடிப்படையாகக் கொண்டு, இத்தகைய நடவடிக்கைகளை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்வதாக முடிவெடுப்பது புத்திசாலித்தனமான தீர்மானமாக இருக்காது என்றும் அவர் விளக்கினார்.

“குறுகிய கால முடிவொன்றை எடுப்பதற்கு வெளிநாட்டுக் காரணியைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது ஒரு தெளிவான நிலைமை. அதுவே சரியான முடிவு,” என்றார்.

மூன்று மாத நிவாரணத் திட்டத்திற்குப் பின்னரான காலப்பகுதி குறித்து அரசாங்கம் அவசரப்பட்டு முடிவெடுக்கத் தேவையில்லை என்றும், எதிர்கால முன்னேற்றங்களின் அடிப்படையில் நிலைமை மீளாய்வு செய்யப்படும் என்றும் கலாநிதி பெர்னாண்டோ தெரிவித்தார்.

தேவைப்பட்டால் கிடைக்கக்கூடிய நிதியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதுடன், நிதி ஒழுக்கத்தைப் பேணிக்கொண்டு போதுமான அளவு பண இருப்பைக் (cash buffer) கொண்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

உலகளாவிய ரீதியில் தற்போதைய முன்னேற்றங்கள் சாதகமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், 50% முதல் 60% வரை அதிகரித்திருந்த எண்ணெய் விலைகள், தற்போது முன்னைய நிலைக்கு நெருக்கமாகக் குறைந்துள்ளன என்றார்.

சுமார் 125 அமெரிக்க டொலராக உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது 80 டொலரை நெருங்கியுள்ள அதேவேளை, சுமார் 280 ரூபாயாக அதிகரித்திருந்த டீசல் விலையும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த மாற்றங்களின் தாக்கம் பிரதிபலிக்க சிறிது காலம் எடுக்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்த நிலைமையை அரசாங்கம் முகாமைத்துவம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகக் கூறினார்.

“தேவைப்பட்டால், நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இலக்கு வைக்கப்பட்ட (குறிப்பிட்ட பிரிவினருக்கான) நிவாரணங்களை வழங்குவோம்,” என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு