டிஜிட்டல் சேவை வரியை விதிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் 100% வரி விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல்

அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைத்து ‘டிஜிட்டல் சேவை வரியை’ (Digital Services Tax) அறிமுகப்படுத்தும் எந்தவொரு நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வர்த்தக வரி (Tariff) விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் டிரம்ப், பல ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை உடனடியாக அமல்படுத்துவது குறித்து விவாதித்து வருவதாகவும், சில நாடுகள் இத்தகைய நடவடிக்கையை அறிமுகப்படுத்துவதற்கு மிக அருகில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய வரியை விதிக்கும் எந்தவொரு நாடும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்துப் பொருட்களின் மீதும் “உடனடியாக 100% வர்த்தக வரியைச்” சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், இந்த 100% வர்த்தக வரியானது சம்பந்தப்பட்ட நாட்டுடன் ஏற்கனவே உள்ள அல்லது எதிர்காலத்தில் வரவிருக்கும் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தங்களையும் விட மேலோங்கி நிற்கும் என்றும், குறிப்பிட்ட அந்த டிஜிட்டல் வரி அமல்படுத்தப்பட்ட உடனேயே இந்த அமெரிக்க வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் சேவை வரிகள் தங்களது பெரிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை (Tech giants) மட்டுமே விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்டு குறிவைப்பதாகக் கூறி, பல நாடுகள் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட அல்லது முன்மொழிந்துள்ள இத்தகைய வரிகளை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நிலை என்ன?

இதேவேளை, இலங்கையானது வெளிநாட்டு நிறுவனங்களால் உள்நாட்டில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகள் மீது ஜூலை 1 ஆம் தேதி முதல் 18% பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (VAT) அறிமுகப்படுத்த உள்ளது.

இருப்பினும், டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ள ‘டிஜிட்டல் சேவை வரியைப்’ போலன்றி, இலங்கையின் இந்த வரியானது பெரிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாயை குறிப்பாக இலக்கு வைக்கும் தனித்துவமான வரி அல்ல. மாறாக, இது உள்நாட்டில் நுகரப்படும் வெளிநாட்டு டிஜிட்டல் சேவைகளுக்காக நுகர்வோர் மீது விதிக்கப்படும் ஒரு பொதுவான ‘வாட்’ (VAT) வரி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு