https://substack.com/
நான் வெவ்வேறு அளவிலான தேர்ச்சிகளுடன் மொத்தம் ஏழு மொழிகளைப் பேசுகிறேன். “இந்த மொழிகளையெல்லாம் நீங்கள் எப்படிப் படித்துக் கற்றுக்கொண்டீர்கள்?” என்று பலரும் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு. எனவே, ஒவ்வொரு முறையும் நான் மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கக் கூடிய ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வலைப்பதிவை எழுதியுள்ளேன்.
எனது தாய்மொழி ரஷ்யன் (Russian) ஆகும். நான் தற்போது வாழ்வதற்கும் பணிபுரிவதற்கும் பயன்படுத்தும் மொழி ஆங்கிலம் (English). இது கிட்டத்தட்ட ‘C2’ என்ற தாய்மொழிக்கு இணையான (Near-native) மிக உயர் மட்டத் தேர்ச்சியைக் கொண்டது. (இந்தப் பதிவில் நான் குறிப்பிடும் C2, B1, B2 போன்ற குறியீடுகள் சர்வதேச CEFR மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை; இதன் மூலமே மொழி கற்றல் சமூகத்தில் ஒருவரின் மொழித் தேர்ச்சி அளவிடப்படுகிறது).
மேலும், நான் வளர்ந்த நாடான பெலாரஸின் பெலாரசியன் (Belarusian) மொழி, எனது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பான மண்டாரின்/சீனம் (Mandarin – தற்போது B1-B2 இடைநிலை மட்டத்தில் உள்ளது), நான் போலந்தில் வாழ்ந்தபோது கற்றுக்கொண்ட போலிஷ் (Polish) மொழி மற்றும் ஓரளவுக்கு நன்றாகப் பேசக்கூடிய பிரெஞ்சு (French) மற்றும் ஸ்பானிஷ் (Spanish) ஆகிய மொழிகளைப் பேசுகிறேன். தற்போது முற்றிலும் ஆரம்ப நிலையிலிருந்து ஜப்பனீஸ் (Japanese) மொழியைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

மொழிகள் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டன. அவை எனக்கான கதவுகளைத் திறந்தன, சிறந்த வாழ்க்கையையும், நட்பையும் தந்தன. அந்நியமாக இருந்த பல நாடுகளில் நான் அந்த இடத்திற்குரியவனாக உணர்வதற்கும் இந்த மொழிகளே உதவின.
இந்த வழிகாட்டி யாருக்கானது?
பின்வரும் தேவைகளுக்காக நீங்கள் ஒரு புதிய மொழியைக் கற்க விரும்பினால், இந்தப்பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்:
-
வெளிநாட்டில் வேலை செய்ய அல்லது படிக்க
-
சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்ள
-
பிற மொழிகளில் உள்ள புத்தகங்கள் அல்லது உள்ளடக்கங்களை வாசிக்க/கிரகிக்க
-
உங்கள் துணையின் (Partner) குடும்பத்தினருடன் உரையாட
-
ஒரு புதிய இடத்தில் உங்களைச் சொந்த ஊரில் இருப்பதைப் போல உணர வைக்க
அதிக சோர்வு (Burnout) அல்லது நேர விரயம் இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான ஆலோசனைகளை வழங்குவதே எனது நோக்கம். மொழி கற்றல் பற்றிய இரண்டாம் மொழி கையகப்படுத்தல் (Second-language acquisition) ஆராய்ச்சிகள் ஆதரிக்கும் உண்மைகளையும், வெவ்வேறு மொழிகளில் எனக்கு நிஜமாகவே வேலை செய்த உத்திகளையும் அடிப்படையாகக் கொண்டே இதனை எழுதியுள்ளேன்.
படி 1: உங்கள் இலக்கு குறித்து நேர்மையாக இருங்கள்

எந்தவொரு செயலியையோ (App) அல்லது புத்தகத்தையோ திறப்பதற்கு முன், உங்களை நீங்களே இப்படிக் கேளுங்கள்:
“நான் ஏன் இந்த மொழியைக் கற்க விரும்புகிறேன்?”
உதாரணமாக, பலர் என்னிடம் “தஸ்தயெவ்ஸ்கியின் (Dostoevsky) நாவல்களை அதன் மூல மொழியிலேயே படிப்பதற்காக ரஷ்ய மொழியைக் கற்க விரும்புகிறேன்” என்பார்கள். ஒரு தாய்மொழியாகக் கொண்ட நானே தஸ்தயெவ்ஸ்கியின் நாவல்களை அவ்வளவு எளிதாக வாசித்துவிட முடியாது. அந்த இலக்கியத் தரம் வாய்ந்த மொழிநடை என்பது ‘C2’ மட்டத்தைச் சார்ந்தது (இதனை அடைய ஒரு தசாப்தம் அல்லது 10 ஆண்டுகள் கூட ஆகலாம்).
அதற்குப் பதிலாக, உங்களது இலக்குகள் இவ்வாறு நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்க வேண்டும்:
-
“இன்னும் ஒரு வருடத்தில் நான் ஜப்பானுக்குச் சுற்றுலா செல்லும்போது, உணவுகளை ஓடர் செய்யவும், வழிகேட்கவும், அடிப்படை உரையாடல்களை மேற்கொள்ளவும் விரும்புகிறேன்.”
-
“எனது ஸ்பானிஷ் பேசும் உறவினர்களுடன் டின்னரின் போது என்னால் சாதாரண உரையாடல்களைச் செய்ய வேண்டும்.”
-
“நான் ஜெர்மனியில் வசிக்கிறேன், அங்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ஜெர்மன் மொழியில் பணியாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும்.”
உங்களது இலக்குதான் நீங்கள் பேசMethod, கேட்கும் திறன், வாசிப்பு அல்லது இலக்கணம் ஆகியவற்றில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.
படி 2: மொழிக்கு ஏற்ப உங்களது உத்தியை மாற்றுங்கள்
அனைத்து மொழிகளும் அனைவருக்கும் ஒரே மாதிரியான சவாலாக இருப்பதில்லை.
-
எனக்கு ‘போலிஷ்’ மொழி மிகவும் எளிதாக இருந்தது; ஏனெனில் எனக்கு ஏற்கனவே பெலாரசியன் மற்றும் ரஷ்ய மொழிகள் தெரியும். அவற்றின் இலக்கணமும் சொற்களும் இதனுடன் ஒத்துப்போயின.
-
ஆனால், ‘ஜப்பனீஸ்’ மொழி எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. ஏனெனில் அதன் வாக்கியக் கட்டமைப்பு (Sentence order) மற்றும் இலக்கணம் ஐரோப்பிய மொழிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எனினும், எனக்கு ஏற்கனவே ‘மண்டாரின்’ (சீனம்) தெரிந்திருந்ததால், ஜப்பனீஸ் எழுத்துக்களை வாசிப்பது எனக்கு ஓரளவுக்கு எளிதாக உள்ளது.
எனவே, நீங்கள் கற்கப் போகும் மொழிக்கும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிடுங்கள். (இதற்கு நீங்கள் ChatGPT போன்ற AI கருவிகளின் உதவியைப் பெற்று உத்திகளை வகுக்கலாம்).
படி 3: ‘Comprehensible Input’ மூலம் தொடங்குங்கள்

ஆராய்ச்சிகளின்படி, ஒரு மொழியை நாம் வேகமாக உள்வாங்க வேண்டுமெனில், நமக்கு ‘Comprehensible Input’ தேவை. அதாவது, நீங்கள் வாசிக்கும் அல்லது கேட்கும் உள்ளடக்கத்தில் 80-90% உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும், எஞ்சிய 10% மட்டுமே புதிய சவாலாக இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் இதற்கு நீங்கள் பின்வருவனவற்றைப் பயன்படுத்தலாம்:
-
எளிய கதைகள் (Simple stories)
-
தினசரி வாழ்க்கை பற்றிய உரையாடல்கள்
-
மெதுவான, தெளிவான ஆடியோக்கள் (Slow audio)
ஆரம்பத்தில் உள்ளடக்கங்கள் சற்று சலிப்பாக இருந்தாலும் பரவாயில்லை, அடிப்படை அடித்தளத்தை உருவாக்க இது அவசியம். இதற்கு நான் LingQ என்ற தளத்தைப் பரிந்துரைக்கிறேன். இது சொற்களின் அர்த்தம் மற்றும் உச்சரிப்பைக்Context உடன் கற்றுக்கொள்ள உதவுகிறது. அல்லது Teach Yourself போன்ற நல்ல ஆரம்பப் புத்தகங்களைப் பயன்படுத்தலாம்.
படி 4: வார இறுதிப் புரட்சியை விட தினசரி தொடர்ச்சி முக்கியம்!
ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரே நாளில் 3 மணிநேரம் படிப்பதைக் காட்டிலும், தினமும் 30 நிமிடங்கள் படிப்பது உங்களது மூளையில் புதிய நரம்பியல் நெட்வொர்க்கை (Neural network) உருவாக்க பெரிதும் உதவும்.
நான் வழக்கமாக மூளை சுறுசுறுப்பாக இருக்கும் காலை வேளையிலோ அல்லது நாய் குட்டியை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது ஆடியோக்களைக் கேட்பதன் மூலமோ தினமும் குறைந்தது ஒரு மணிநேரமாவது இதற்காக ஒதுக்குகிறேன். உங்களது முன்னேற்றத்தைக் காணும்போது, தானாகவே உங்களுக்கான உந்துதல் (Motivation) கூடும்.
படி 5: இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
பலர் பாதியிலேயே கைவிடுவது இங்குதான். ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது எளிதானதல்ல. செயலிகளில் தினமும் 5 நிமிடங்கள் மட்டும் விளையாடுவது உங்களது ‘Streak’ ஐ தக்கவைக்க உதவுமே தவிர, உங்களை சரளமாகப் பேச வைக்காது.
அமெரிக்காவின் வெளிநாட்டு சேவை நிறுவனத்தின் (FSI) கணிப்பின்படி, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர், ஸ்பானிஷ் போன்ற ஒரு மொழியில் தொழில்முறைத் தேர்ச்சியை (B2 Level) அடைய கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முழுநேரப் படிப்பு (நூற்றுக்கணக்கான மணிநேரங்கள்) தேவைப்படும். ஜப்பனீஸ் அல்லது சீன மொழிகளுக்கு இன்னும் கூடுதல் காலம் எடுக்கும். மொழி கற்பதற்கு “தனித்துவமான திறமை (Talent)” தேவையில்லை, தொடர்ச்சியான உழைப்பு (Consistency) மட்டுமே போதும்.
படி 6: இலக்கணம் படிக்கலாம், ஆனால் அளவோடு!
பெரியவர்கள் மொழி கற்கும்போது இலக்கண விதிகளைத் தெரிந்துகொள்வது நல்லது. ஆனால், அதுவே உங்களது முழு நேரத்தையும் ஆக்கிரமிக்கக் கூடாது.
-
சிறந்த விகிதாச்சாரம்: 10 நிமிடங்கள் இலக்கணம் படித்தால், 40 முதல் 50 நிமிடங்கள் வாசிப்பு அல்லது கேட்பதற்குக் (Input) கொடுக்க வேண்டும். இலக்கணம் உங்களுக்குப் வடிவங்களை அடையாளம் காட்ட உதவும், ‘Input’ அதனை மனதில் பதிய வைக்கும்.
படி 7: எப்போது பேசத் தொடங்க வேண்டும்?
பேசுவது என்பது உங்கள் மூளையில் உள்ள மொழியின் மாதிரியை நிஜ நேரத்தில் பயன்படுத்தப் பயிற்சி அளிப்பதாகும்.
-
எனக்கு ஏற்கனவே பிரெஞ்சு தெரிந்திருந்ததால், ஸ்பானிஷ் மொழியை நான் மிக ஆரம்பத்திலேயே பேசத் தொடங்கினேன்.
-
ஆனால், ஜப்பனீஸ் மொழியில் அதன் கட்டமைப்பு புரியும் வரை நான் பேசுவதைத் தள்ளிப்போட்டுள்ளேன்.
எதிர் தரப்பில் பேசுவதை உங்களால் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிகின்ற (B1 Level) நிலையை அடைந்த பிறகு பேசுவதே சிறந்தது. இல்லையெனில், ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்கள் மொழிபெயர்ப்பைத் தேட வேண்டியிருக்கும்.
படி 8: நன்றாகப் பேச, நிறையப் பேசுங்கள்!
உங்களால் எளிய உரையாடல்களைப் புரிந்துகொள்ள முடிந்ததும், வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பேசப் பழகுங்கள். ஆரம்பத்தில் 30 நிமிடங்கள் பேசுவது போதுமானது. உங்களது தனிப்பட்ட பயிற்சியாளர் (Tutor) உங்களை அதிகம் பேச அனுமதிக்க வேண்டும், உங்கள் தவறுகளை உடனுக்குடன் திருத்தாமல் உரையாடல் தடையின்றி நகர உதவ வேண்டும்.
ஆரம்பக்கட்ட 20 மணிநேர உரையாடல்கள் மிகவும் கடினமாகவும் தடுமாற்றத்துடனும் தான் இருக்கும், அது இயல்பானது. பட்ஜெட் குறைவாக இருந்தால் HelloTalk அல்லது italki போன்ற தளங்களில் மொழி பரிமாற்றம் (Language Exchange) செய்யலாம். வசதியிருந்தால் italki அல்லது Verbling தளங்களில் கட்டணம் செலுத்தி ($15 – $25) ஒரு நல்ல ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பது உங்கள் நேரத்தைச் சேமிக்கும்.
உதாரணம்: என்னை ஆங்கிலத்தில் சரளமாக்கியது எது?
ஆங்கிலத்தை நான் பூஜ்ஜியத்திலிருந்து தற்போதைய உயர் மட்டம் (C2) வரை வளர்த்துக் கொண்ட விதம்:
-
அடிப்படை இலக்கணம் மற்றும் சொற்களை ‘Comprehensible Input’ மூலம் கற்றுக்கொண்டேன் (B1 நிலை வரை).
-
பின்னர், எனக்குப் பிடித்த புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் பாட்காஸ்ட்கள் மூலம் தினமும் 3+ மணிநேரம் என 2-3 ஆண்டுகள் தீவிரமாக ஆங்கிலத்தை நுகர்ந்தேன் (Massive exposure).
-
ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எனது அன்றைய துணையுடன் (Partner) இணைந்து வாழ்ந்தேன்; நான் பேசும்போது அவர் எனது தவறுகளைத் திருத்தினார் (B2 நிலைக்கு மேல் தவறுகளைத் திருத்துவது மொழியை மெருகூட்ட உதவும்).
நான் பரிந்துரைக்காதவை (What I do not recommend):
-
குழு வகுப்புகள் (Group Classes): இவை பெரியவர்களுக்கு மிகவும் மெதுவான மற்றும் திறனற்ற முறையாகும். உங்களுக்குப் பேசும் வாய்ப்பு மிகக் குறைவாகவே கிடைக்கும்.
-
ஒரே நேரத்தில் 10 செயலிகள்/புத்தகங்கள்: உங்களுக்குப் பிடித்த ஒன்று அல்லது இரண்டு வளங்களை மட்டும் தேர்ந்தெடுத்து தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
-
மனப்பாடம் செய்தல்: இலக்கணத்தையும் சொற்களையும் கட்டாயப்படுத்தி மனப்பாடம் செய்யாதீர்கள். தொடர்ச்சியான வாசிப்பும் கேட்பதும் அவற்றை தானாகவே உங்களுக்குப் பழகச் செய்யும்.
-
சிறு பிள்ளைகளைப் போலக் கற்க முயல்தல்: குழந்தைகளுக்குப் பகுப்பாய்வுத் திறன் இல்லை, ஆனால் பெரியவர்களாகிய நமக்கு அது உள்ளது. எனவே ஒப்பிட்டு, பகுப்பாய்வு செய்து உத்திகளுடன் கற்பதே வேகமான வழியாகும்.
நான் பரிந்துரைக்கும் சில பொதுவான வளங்கள் (Resources):
-
Teach Yourself / Language Hacking (Benny Lewis): ஆரம்பக் கட்டப் பயிற்சிக்குச் சிறந்த புத்தகங்கள்.
-
LingQ: வாசிப்பதற்கும் கேட்பதற்கும் (Input) எனது விருப்பமான தளம்.
-
Duolingo: ஆரம்பத்தில் ஒரு பழக்கத்தை (Habit) உருவாக்குவதற்கும் அடிப்படைகளைக் கற்பதற்கும் நல்லது, ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு நீங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.
-
Language Reactor: இது யூடியூப் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) சப்டைட்டில்களைக் கிளிக் செய்து படிக்க உதவும் ஒரு சிறந்த குரோம் பிளகின் (Chrome plug-in).
-
Easy Languages (YouTube): இடைநிலை (Intermediate) மட்டத்தில் உள்ளவர்கள் நிஜமான நேட்டிவ் ஸ்பீக்கர்களின் பேச்சைப் புரிந்து கொள்ள உதவும் சிறந்த யூடியூப் தளம்.
முடிவாக…
ஹங்கேரியப் பன்மொழி அறிஞர் கடோ லோம்ப் (Kató Lomb) கூறிய ஒரு புகழ்பெற்ற பொன்மொழி:

“நாம் மொழிகளைக் கற்க வேண்டும், ஏனென்றால் ஒரு மொழியானது ஓரளவுக்கு அரைகுறையாகத் தெரிந்திருந்தாலும் கூட, அது நாம் அறிந்துகொள்ளக் கூடிய உலகின் மிக மதிப்புமிக்க ஒரு விஷயமாகும்.”
மொழிகள் என்பது உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கே திருப்பித் தரும் ஒரு அற்புதமான கலை. உங்களது இலக்கைத் தீர்மானித்து, இன்றே ஒரு புதிய மொழியைக் கற்கத் தொடங்குங்கள்.
இனிய கற்றல் நல்வாழ்த்துகள்!
-
எழுத்தாளர் விபரம்: நான் சோபியா பால்டர்சன் (Sofia Balderson). ‘Hive’ என்ற உலகளாவிய சமூகக் குழுமத்தை வழிநடத்துகிறேன். எனது தனிப்பட்ட சிந்தனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக இந்த ‘Notes from the Margin’ செய்தி மடலை (Newsletter) நடத்தி வருகிறேன்.*