சென்னையில்-தங்கம் விலை அதிர்ச்சிகர உச்சம்: பவுன் ரூ.97,000-ஐ கடந்தது!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, தங்கம் விலை ஒரு பவுன் ரூ.97,000-ஐ தாண்டி விற்பனையாகிறது.

கடந்த செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் விலை அக்.7-ல் ரூ.90,400 ஆக உயர்ந்தது. இன்று அக்.17-ம் தேதி ஒரு பவுன் ரூ.97,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். அதன்படி ட்ரம்ப் வரி விதிப்பு, எச்1பி விசா கட்டணம் உயர்வு, போர்ச் சூழல்கள் எனப் பல்வேறு அரசியல், பொருளாதார சூழல்களால் சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி சிறிய முதலீட்டாளர்களும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். இதனால், இவற்றின் தேவை அதிகரித்து, விலை உயர்கிறது. விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும் என்று கணிக்கப்படுகிறது.

அதேபோல் பிரிக்ஸ் நாடுகளும், டாலருக்கு மாற்றான சக்திவாய்ந்த கரன்சியை உருவாக்கும் முனைப்பில் உள்ளதால், அந்த நாடுகளும் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்து வருகிறது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்குக் காரணம். இந்தியாவில் பண்டிகை காலம் என்பதாலும் தங்கம், வெள்ளி விலை ஏற்றம் காண்கிறது. ஆனால், பண்டிகை காலம் என்பது தற்காலிக காரணம் தான். முக்கியக் காரணம் சர்வதேச பொருளாதார, அரசியல் சூழல்களே.

அதன்படி இன்று (அக்.17) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,200-க்கும், பவுனுக்கு ரூ.2400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.97,600-க்கும் விற்பனை ஆகிறது. இது நகை வாங்குவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலை ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.203-க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,03,000-க்கு விற்பனையாகிறது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்