மன்னார் தீவில் செயல்படுத்தப்பட்டு வரும் காற்றாலை மின் மேம்பாட்டுத் திட்டங்கள் மக்களுக்கும் அதன் சுற்றுச்சூழல் அமைப்புக்கும் முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தலைஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர் சஜீவ சாமிகர எச்சரித்துள்ளார்
நிலம் மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சாமிகாரா நிலையான எரிசக்தி ஆணையம் இலங்கை மின்சார வாரியம்மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி
ஆகியவை இணைந்து தயாரித்த திட்டங்கள் மன்னாரின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் யதார்த்தங்களை புறக்கணித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒரே நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளனஎன
தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
“மன்னார் திட்டத்திற்கான திட்டங்கள் எரிசக்தி உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்பதை எங்கள் ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன. தீவில் வசிப்பவர்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் அல்லது தீவின் சிக்கலான பல்லுயிர் மற்றும் நில பயன்பாட்டு அமைப்புகள் குறித்து அவர்கள் எந்த கவனமும் செலுத்துவதில்லை
பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தேவைப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு நியாயமான மாற்றத்தை உறுதி செய்வதற்குப் பதிலாக தனியார் துறை முதலீட்டை எளிதாக்குவதை முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு ஆராய்ச்சி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.
“நியாயமான மாற்றத்தின் கொள்கைகளைப் புறக்கணிப்பதன் மூலம் இந்த நிறுவனங்கள் மீன்பிடி சமூகங்கள் விவசாய வாழ்வாதாரங்கள் மற்றும் தீவின் இயற்கை அமைப்புகளில் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களை கவனிக்கவில்லை.