அமெரிக்காவை தளமாக கொண்டஏஏஜிஐ நிறுவனம் இலங்கையை சேர்ந்த நிறுவனமொன்றுடன் இணைந்து இலங்கைக்கான தனியார் உள்நாட்டு விமானசேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோட்டஸ் ஏர்எனப்படும் இந்த விமானசேவையை ஆரம்பிக்கும் 100 மில்லியன் திட்டம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோட்டஸ் ஏர்இரத்மலானை மத்தலை விமானநிலையங்களில் இருந்து இயங்கும் எனவும் பலாலி திருகோணமலை இலங்கையின் 12 இடங்களிற்கு சேவையை நடத்துவதற்கான திட்டங்கள் உள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்தியா மாலைதீவிற்கு விஸ்தரிக்கும் நோக்கம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 இல் இந்த விமானசேவை ஆரம்பமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
