இலங்கையின் 2025ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பீட்டினை சர்வதேச நாணயநிதியம் 3.1 வீதத்திலிருந்து 4.2 வீதமாக உயர்த்தியுள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின்ஆசிய பசுபிக் பிரிவின் பிரதி இயக்குநர் தோமஸ் ஹெல்பிலிங் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
நெருக்கடியின் போது ஏற்பட்ட ஆழமான மந்தநிலையைத் தொடர்ந்து இலங்கை ஒரு உள்நாட்டு சீர்திருத்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது மேலும் இப்போது மிகவும் வலுவான வளர்ச்சியிலிருந்து பயனடைகிறது கடந்த ஆண்டு 5 வீதத்தை எட்டியுள்ளது
இந்த ஆண்டு 4.2 ஆகவும் அடுத்த ஆண்டு 3 ஆகவும் இருக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம் ”முக்கிய ஆலோசனை என்னவென்றால் திட்டத்தை செயல்படுத்துவதைத் தொடரவும் திட்டத்தின் முழுப் பலன்களைப் பெறவும் வேண்டும்.