தீபாவளி பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்: சென்னையில் ஜவுளி பட்டாசு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அமோகம்-மக்​கள் குடை பிடித்​த​படியே ‘ஷாப்​பிங்’

தீ​பாவளி பண்​டிகை இன்று இந்தியாவில்நாடு​முழு​வதும் கோலாகல​மாக கொண்​டாடப்​படு​கிறது. புத்​தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து இனிப்பு வழங்கி வீடு​தோறும் தீபம் ஏற்றி வைத்து பண்​டிகையை மக்​கள் கொண்​டாடினர். இதை முன்​னிட்டு சென்​னை​யில் ஜவுளி பட்​டாசு மற்​றும் வீட்டு உபயோகப் பொருட்​களின் விற்​பனை அமோக​மாக நடந்​தது.

தீபாவளி பண்​டிகை என்​றாலே துணிக்​கடைகள் அதி​கம் உள்ள சென்​னை​யின் முக்​கிய கடை வீதி​களில் கூட்ட நெரிசல் இயல்​பாகவே அதி​கரித்து விடும். அந்​தவகை​யில் தீபாவளிக்கு முந்​தைய நாளான நேற்​று சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் உள்ள ஜவுளி கடைகளில் காலை முதலே மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலை​யிலும் நேற்று விடு​முறை நாள் என்​ப​தால் மக்​கள் தங்​களது குடும்​பத்​தினருடன் ஜவுளி கடைகள் பட்​டாசு கடைகளை நோக்கி படையெடுத்​தனர்.


சென்​னை​யில் தி.நகர் புரசை​வாக்​கம் வண்​ணாரப்​பேட்​டை சவுக்​கார்​பேட்​டை பெரம்​பூர் பாரி​முனை உள்​ளிட்ட முக்​கிய கடை வீதி​களில் மக்​கள் குடை பிடித்​த​படியே ‘ஷாப்​பிங்’ செய்​தனர். துணி​கள் நகைகள் குழந்​தைகளுக்​கான விளை​யாட்​டுப் பொருட்​கள் வீட்டு உபயோகப்​பொருட்​கள் என அனைத்​து​வித பொருட்​களும் ஒரே இடத்​தில் வாங்க பலரும் தி.நகரிலே குவிந்​த​தால் அப்​பகு​தி​யில் திரும்​பிய திசையெல்​லாம் மனித தலைகளாகவே காணப்​பட்​டன.

மேலும் நேற்று கடைசி நேர விற்​பனை என்​ப​தால் சிறிய ஜவுளி கடைகளில் ஏராள​மான புதிய ரக ஆடைகள் பல விற்று தீர்ந்​தன. தீபாவளி ஆஃபரில் வீட்டு உபயோக பொருட்​களை வாங்​கு​வ​தி​லும் மக்​கள் ஆர்​வம் காட்​டினர். தீபாவளியை முன்​னிட்டு பல்​வேறு சலுகைகள் வழங்​கப்​பட்​ட​தால் சென்​னை​யின் பல பகு​தி​களில் இருசக்கர வாக​னம் மற்​றும் செல்​போன்​களின் விற்​பனை​யும் அமோக​மாக நடந்​தது.


இது​மட்​டுமில்​லாமல் சாலை​யோர கடைகளி​லும் மக்​கள் கூட்​டம் அதி​க​மாக காணப்​பட்​டது. கம்​மல் வளை​யல் தோடு​கள்இ காலணி​கள் பெல்ட்​டு​கள் விற்​பனை ஜோராக நடை​பெற்​றது.

. வண்​ணாரப்​பேட்டை எம்​.சி. ​சாலை​யில் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட சில்​லரை மற்​றும் மொத்த ஜவுளிக்​கடைகளில் கூட்​டம் அதி​க​மாக இருந்​த​தால் கடுமை​யான போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதே​போல் போரூர் பாடி குரோம்​பேட்டை பகுதி கடைகளி​லும் கூட்​டம் இருந்​தது.

ஜவுளிக் கடைகளை தொடர்ந்​து இனிப்​பு கார கடைகளில் கூட்​டம் அதி​க​மாக காணப்​பட்​டது. பட்​டாசு கடைகளை பொருத்​தவரை பட்​டாசு விற்​பனை நேற்று பல பகு​தி​களில் மந்​த​மாக​வும் பின்​னர் விறு​விறுப்​பாக​வும் நடந்​தது. சென்னை தீவுத்​திடலில் அமைக்​கப்​பட்​டிருந்த பட்​டாசு கடைகளி​லும் மக்​கள் கூட்​டம் காணப்​பட்​டது. இதே​போல் பூக்​கடைகள் நகைக் கடைகள் ஃபேன்ஸி ஸ்டோர்​ஸ் பழக்​கடைகளி​லும் மக்​கள் கூட்​டம் அதி​க​மாகவே இருந்​தது. இதனால் சென்​னை​யில் முக்​கிய கடைவீ​தி​கள் அமைந்​துள்ள சாலைகளில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்பட்​டது.

இதனிடையே சென்​னை​யில் இருந்து இயக்​கப்​பட்ட 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட அரசு சிறப்பு பேருந்​துகள் மூல​மும் ரயில்​கள் ஆம்னி பேருந்​துகள் மூல​மும் சுமார் 8 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் சொந்த ஊர் சென்​றுள்​ளனர். இதுத​விர அவர​வர் சொந்த வாக​னங்​களி​லும் லட்​சக்​கணக்​கானோர் சொந்த ஊர் சென்​றுள்​ளனர்.

இதனால் ஜிஎஸ்டி சாலை​யில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதற்கு தீர்​வாக மாற்​றுப்​பாதை​யும் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதே​போல் தீபாவளி முடிந்து மீண்​டும் சென்னை தி்ரும்​ப​வும் உரிய போக்​கு​வரத்து வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும் தேவைக்​கேற்ப பேருந்​துகள் தடை​யின்றி இயக்​கப்​படும் என்​றும் அமைச்​சர் சிவசங்​கர் தெரிவித்​துள்​ளார்​.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்