அரசியல்வாதிகளின் காணி அபகரிப்பு தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது என காணிவிவகார பிரதியமைச்சர் அரவிந்த செனெரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
நாடளாவிய ரீதியில் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக காணிகளை அபகரித்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியமைக்கு பதில்அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
