ரஸ்யாவின் எண்ணெய் நிறுவனங்களிற்கு எதிராக புதிய தடைகளை அறிவித்துள்ள அமெரிக்கா உக்ரைன் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான அர்ப்பணிப்பு ரஸ்யாவிடம் இல்லை என குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்க ரஸ்ய ஜனாதிபதிகளிற்கு இடையிலான உச்சிமாநாடு குறித்த திட்டம் தோல்வியில் முடிவடைந்த மறுநாள் அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.
ரஸ்யாவின் ரொஸ்நெவ்ட் லுகோயில் என்ற இரண்டு எண்ணெய் நிறுவனங்களிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
தற்போது கொலைகளை நிறுத்துவதற்கான யுத்த நிறுத்தத்திற்கான தருணம் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஸகொட் பெசென்ட் தெரிவித்துள்ளார்
அவரின் கருத்து வெளியானதை தொடர்ந்து சர்வதேச அளவில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
