எதிர்கட்சிகள் கூட்டணியை உருவாக்கியிருப்பது சிறந்த விடயம் இது மக்கள் மோசடி ஊழலில் ஈடுபட்டவர்களை ஒரே குழுவாக தோற்கடிப்பதற்கு உதவும் என பிரதியமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் அரசாங்கத்துடன் உள்ளனர் அரசாங்கம் மக்களுடன் ஸ்திரமான விதத்தில் முன்னோக்கி நகரும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி கூட்டணி குறித்து எங்களிற்கு எந்த அச்சமும் இல்லை,அவர்கள் கூட்டணியை ஏற்படுத்திக்கொள்வது நல்ல விடயம் அது மக்கள் மோசடி ஊழலில் ஈடுபட்டவர்களை ஒரேகுழுவாக தோற்கடிப்பதற்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு எந்த வித சட்ட தடையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
