தமிழ் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை தொடர்ந்து துன்புறுத்துவதை இலங்கை அதிகாரிகள் நிறுத்தவேண்டும் – எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு

இலங்கையை சேர்ந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணணிற்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத துன்புறுத்தலை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையின் வடபகுதியில் மனித உரிமை துஸ்பிரயோகங்களை பதிவிடும் குமணன் அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் புதிய துன்புறுத்தல்கள் நடவடிக்கைகளிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சுயாதீன ஊடகவியலாளரான குமணனின் படங்கள் கார்டியன் கிரவுண்ட் வியுஸ் ஈவினிங் ஸ்டார்ன்டர்ட் போன்றவற்றில் வெளியாகியுள்ளன.
இலங்கையில் அதிக துன்புறுத்தல்களிற்கு உள்ளாகியுள்ள ஊடகவியலாளர்களில் ஒருவர் குமணன்.

2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் அவர் இலங்கையின் வடக்குகிழக்கில் தமிழ்மக்களிற்கு மிகவும் உணர்வுபூர்வமான விடயங்களான செம்மணி மனித புதைகுழி அகழ்வு( யாழ்ப்பாணம்)வடக்குகிழக்கில் நில அபகரிப்பு,சூழல் குற்றங்கள்,இலங்கையின் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான போராட்டம் போன்றவை குறித்து செய்தியறிக்கையிட்டுள்ளார்.
அவரது ஊடக பணி தமிழ்மக்களிற்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து சர்வதேசசமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதால் அதற்கு பழிவாங்குவதற்காக செப்டம்பர் மாதம் 26ம் திகதி ஜெனீவாவில் இடம்பெற்ற பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் குறித்த ஐக்கிய நாடுகளின் குழுவின் அமர்வின் போது இலங்கை அரசாங்க பிரதிநிதி பகிரங்கமாக, குமணன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்என்பதற்கான நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.
நிதிக்குற்றங்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கணபதிப்பிள்ளை குமணன் தனது சொந்த நலனிற்காக அரசபடையினருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தூண்டுகின்றார்,என அரசபிரதிநிதி தெரிவித்தார். இந்த கருத்துக்கள் குமணனிற்கு அவமரியாதை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டவை.
இது தனது பணிக்காக ஏற்கனவே பல முறை இலக்குவைக்கப்பட்டுள்ள செய்தியாளருக்கு எதிரான பாரதூரமான தாக்குதல்,என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பின் தென்னாசிய பிரிவிற்கான தலைவர் சீலியா மேர்சியர் நன்கறியப்பட்ட ஊடகவியலாளருக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் இலங்கையின் தமிழர் பகுதிகளில் விமர்சங்களை எழுப்பும் குரல்களை மௌனமாக்கும்,சுயாதீன ஊடகத்துறையை குற்றமாக்கும் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிகாரிகளை உடனடியாக இந்த நடவடிக்கைளை நிறுத்துமாறும் கணபதிப்பிள்ளை குமணனனின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்,இலங்கையில் அச்சுஊடக சுதந்திரத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை முடிவிற்கு கொண்டுவருவதற்கான அவசியமான தேவை உள்ளது.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்