விசா கடவுச்சீட்டு மற்றும் தூதரக சேவைகளுக்கான அவுட்சோர்சிங் சேவை வழங்குநரான ஐவிஎஸ்லங்கா அக்டோபர் 31 2025 அன்று செயல்பாடுகளை நிறுத்துவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி நவம்பர் 3 2025 முதல் விசா கடவுச்சீட்டுமற்றும் தூதரகம் தொடர்பான அனைத்து சேவைகளும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் (கொழும்பு) உதவி உயர் ஸ்தானிகராலயம் (கண்டி) மற்றும் இந்திய துணைத் தூதரகம் (யாழ்ப்பாணம்) ஆகியவற்றால் நேரடியாகக் கையாளப்படும்.
விண்ணப்பதாரர்களுக்காக ஒரு புதிய நியமன மேலாண்மை அமைப்பு அமைக்கப்பட்டு வருவதாகவும் மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டுதலுக்காக விண்ணப்பதாரர்கள் (https://www.hcicolombo.gov.in) ஐப் பார்வையிடவும் அல்லது கொழும்பு கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அந்தந்த அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளவும் உயர் ஸ்தானிகராலயம் அறிவுறுத்தியுள்ளது.
