மத்தல விமானநிலைய பகுதி வனவிலங்குகளால் ஆபத்தற்ற பகுதி என இலங்கையின் சிவில் விமானப்போக்குவரத்து சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
விமானநிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிற்கு முடிவுகட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்ததன் பின்னர் சிவில் விமான போக்குவரத்து சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் விமானங்களின் பறத்தலிற்கு வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை காணப்பட்ட நிலையிலேயே அதற்கான தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்திருந்தனர்.
தற்போது பாதுகாப்பு நிலையை உயர்த்தியுள்ளதை தொடர்ந்து மத்தல விமானநிலையத்திற்கு மேலும் பல விமானசேவைகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக துறைமுக விவகார சிவில் விமான போக்குவரத்து பிரதியமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
