காசாவில் செவ்வாய்கிழமை இரவு இஸ்ரேல் மேற்கொண்ட தொடர் தாக்குதல்களில் 104 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
46 சிறுவர்கள் 20 பெண்கள் உட்பட 104 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 250க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசாநகரின் சப்ராவில் இஸ்ரேலின் தாக்குதலிற்கு இலக்கான அல்பனா குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
புரெஜி அகதிமுகாமில் புளொக் ஏழு பகுதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சில் அபுசரார் குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


இது என்ன உலகம் இதுதான் யுத்த நிறுத்தமா என பயனின் உறவினரான பெண் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார் பிள்ளைகள் உறங்கிக்கொண்டிருந்தவேளை கொல்லப்பட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
