நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தற்போது இரண்டுவீதம் பங்களிப்பை வழங்கும் இலங்கை துறைமுகங்கள் 2030 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 6வீத பங்களிப்பை வழங்கும் என சர்வதேச புலம்பெயர் அமைப்பின் இலங்கையின் குடிவரவு மற்றும் எல்லை முகாமைத்துவ பிரிவின் தலைவர் சாந்த குலசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பாரிய சர்வதேச பாதையில் கேந்திர முக்கியத்துவம் வாய்;ந்த பாதையில் அமைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர்இலங்கை ஐந்து விமானநிலையங்களையும் 9 துறைமுகங்களையும் கொண்டுள்ளமை அதன் பொருளதாரத்திற்கு மிகுந்த சாதகமான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
2030 இல் 50 மில்லியன் மக்கள் உயர்நடுத்தர வர்க்கத்திற்குள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்தியாவிற்கு அருகில் இருப்பது இலங்கைக்கு சாதகமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.