அமெரிக்க நிதி நிறுவனத்திடம் 500 மில்லியன் டொலர் கடன் பெற்று இந்திய வம்சாவளி சிஇஓ மோசடி

வாஷிங்டன்: அமெரிக்க நிதி நிறு​வனத்​திடம் இருந்து 500 மில்​லியன்டொலர் கடன் பெற்று இந்​திய வம்​சாவளி சிஇஓ மோசடி செய்​துள்​ளார்.

அமெரிக்​கா​வில் உள்ள நிதி நிறு​வனம் பிளாக் ராக். இந்​நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மான எச்​பிஎஸ் நிறு​வனத்​திடம் பிராட்​பேண்ட் டெலி​காம் மற்​றும் பிரிட்​ஜ்​வாய்ஸ் என்ற தொலைத் தொடர்பு நிறு​வனங்​களை நடத்தி வரும் இந்​திய வம்​சாவளி சிஇஓ பாங்​கிம் பிரம்​பட் என்​பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 500 மில்​லியன் டொலருக்கு மேல் கடன் பெற்​றுள்​ளார்.

கடனாக பெற்ற பணத்தை எல்​லாம் இவர் இந்​தியா மற்​றும் மொரிசீயஸ் நாட்​டுக்கு மாற்​றி​யுள்​ளார். சில -மெ​யில் முகவரி​களில் மாற்​றங்​கள் இருந்​ததை கண்​டு​பிடித்த எச்​பிஎஸ் நிறுவன ஊழியர் ஒரு​வர் பிராட்​பேண்ட் டெலி​காம் மற்​றும் பிரிட்ஜ் வாய்ஸ் நிறு​வனம் முறை​கேடு​கள் செய்​வதை கண்​டறிந்​தார்.

இது குறித்து எச்​பிஎஸ் நிறுவன அதி​காரி​கள் பிரம்​பட்​டிடம் கேட்​ட​போது அது பற்றி கவலைப்பட வேண்​டாம் கடனை அடைத்து விடு​வோம் என கூறி​யுள்​ளார். அதன்​பின் அவர் எந்த கேள்வி​களுக்​கும் பதில் அளிக்​க​வில்​லை.

இதையடுத்து எச்​பிஎஸ் நிறுவன அதி​காரி​கள் கடந்த ஜூலை மாதம் பிரம்​பட் நிறு​வனங்​களுக்கு சென்​ற​போது அவை மூடப்​பட்டு இருந்​தன. கடந்த 2 ஆண்​டு​களாக பிரம்​பட் நிறு​வனங்​கள் அளித்த வாடிக்​கை​யாளரின் -மெ​யில்​கள் வாடிக்​கை​யாளர்​கள் பிரம்​பட் நிறு​வனத்​துடன் செய்த ஒப்​பந்​தங்​கள் எல்​லாம் போலி​யானவை என கண்​டறியப்​பட்​டது.

கடன் அடமான​மாக காட்​டிய சொத்​துக்​கள் எல்​லாம் விற்​கப்​பட்டு இந்​தியா மற்​றும் மொரிசீயஸில் உள்ள வங்கி கணக்​கு​களுக்கு மாற்​றப்​பட்டு விட்​டன. கடந்த ஆகஸ்ட் மாதம் பிரம்​பட்​டின் தொலைத் தொடர்பு நிறு​வனங்​கள் திவால் ஆனதாக அறிவிக்​கப்​பட்​டன. 500 மில்​லியன் டாலருக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்த பாங்​கிம் பிரம்​பட் தற்​போது இந்​தி​யா​வில்​ இருப்​ப​தாக நம்​பப்​படுகிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்