ருமேனியாவில் வேலை பெற்றுதருவதாக தெரிவித்து 740 மில்லியன் ரூபாயினை பலரிடமிருந்து பெற்றுக்கொண்டு ஏமாற்றிய மஹரகமவை சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்நிறுவனத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் 470க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் உள்ளதாக சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் அவரது சட்டத்தரணி ஊடாக சரண் அடைந்துள்ளார்.இந்த மோசடியின் மற்றுமொரு முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் உரிமையாளரின் மனைவி குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறுநீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ருமேனியாவில் வேலைவாய்ப்பை பெற்றுதருவது என தெரிவித்து நாடளாவியரீதியில் பெருமளவானவர்களிடம் இந்த முகவர் நிலையம் பணத்தை பெற்றுக்கொண்டது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.