அனுராதபுரத்தில் உள்ள கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்தியாலயத்தின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோவை உருவாக்கியதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில்பாராட்டு விழா நடைபெற்றது.
ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் கண்டுபிடிப்பாளர்கள் ஆணையம் மற்றும் தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்று மாணவர்களின் -செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ரோபோவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் நிறுவன ஆதரவை உறுதியளித்தனர்