தெல்லிப்பளை வித்தகபுரம் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் இலங்கை அரசாங்கமானது அத்துமீறி பொதுமக்களினுடைய தோட்டக்காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. குறித்த விடயம் தொடர்பாக அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சென்று நிலமைகளை அவதானித்ததுடன்அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த சந்திப்பில் தோட்டக்காணிகள் விடுவிக்கப்படாமல் அடாத்தாக பறிக்கப்படுவதானது எமது அன்றாட இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என்பதோடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன் விடுவிக்கப்படாத காணிகளை குறித்த பிரதேசத்தில் காணிகள் அற்ற குடும்பங்களுக்கு வழங்கி அவர்களை குடியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
