S Rubatheesan
sunday times
மட்டக்களப்பின் மண்முனையை சேர்ந்த கிராமமொன்றை சேர்ந்த ஒருவர் அவசர தேவைக்காக ஒருவரிடமிருந்து அதிகூடிய வட்டிக்கு இரண்டுலட்சம் ரூபாயினை பெற்றார்.அரசதனியார் கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் கடன்பெற முடியாததால் அவர் தனிநபரை நாடினார்.அந்த நபர் தான் வழங்கிய பணத்திற்காக ஒருவருடத்திற்கு வட்டியாக மாத்திரம் 3.2 இலட்சத்தினை வசூலித்துள்ளார்.
கடன்வாங்கிய நபர் வட்டியையும் முதலையும் செலுத்தமுடியாதநிலையில் தனது வீட்டை ஒந்தாச்சிமடத்தை சேர்ந்த ஒருவருக்கு விற்றுள்ளார்.
வடகிழக்கு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் வட்டி முதலைகளிற்கும் பதிவு செய்யப்படாத நுண்கடன் நிறுவனங்களிற்கும் பலியாகியுள்ளனர்.இந்த பகுதி மக்கள் அதிகளவில் விவசாயம் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
பதிவுசெய்யாத நபர்களின் இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தங்கள் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்தே இந்த விவகாரத்தின் பாரதூரதன்மை குறித்து தெரியவந்ததாக தெரிவிக்கின்றார்மண்முனைபற்று பிரதேச சபையின் மேகசுந்தரம் வினோராஜ்.
‘’முதலில் அவர்கள் பெண்களை இலக்குவைப்பார்கள்குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களை இலக்குவைப்பார்கள் என தெரிவிக்கும் அவர் அவர்களிற்கு குழு கடன்களை வழங்க தயார் என தெரிவிப்பார்கள் என தெரிவிக்கின்றார்.
வாங்கிய பணத்தை நாளாந்த வாராந்த மாதாந்த அடிப்படையில் திருப்பி செலுத்தவேண்டும்இஎன தெரிவிக்கும் மண்முனைபற்று பிரதேச சபையின் மேகசுந்தரம் வினோராஜ் குழுவின் தலைவராக உள்ளவரகக்கு வட்டியை முதலை பெற்றுத்தருமாறு அழுத்தம் கொடுப்பார்கள் என்கின்றார்.
தவணைமுறையில் பணத்தை அவர்களால் செலுத்த முடியாதபோது அந்த பணத்தை மீள பெறுவதற்காக பதிவுசெய்து கொள்ளாத கொடுப்பனவாளர்கள் சகலவழிமுறைகளையும் கையாள்வார்கள்கடன் முகவர்களை இரவில் வீடுகளிற்கு அனுப்புவார்கள் பாலியல் இலஞ்சம் பெற முயல்வார்கள் என அவர் தெரிவிக்கின்றார்.
உள்ளுர் மக்கள் கடன்முதலைகள் மற்றும் பதிவு செய்யாத நுண்கடன் நிறுவனங்களிற்கு பலியாவதை தடுப்பதற்காக கடன்பொறிகுறித்த விழிப்புணர்வு திட்டத்தினை மண்முனைப்பற்று பிரதேச சபை ஆரம்பித்துள்ளது.சமுர்த்தி வங்கி போன்ற பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் ஊடாக கடன்களை பெறுமாறு மக்களை பிரதேசசபை ஊக்குவித்து வருகின்றது.
எங்கள் மாவட்டத்தின் சமுர்த்தி வங்கி 1500 மில்லியனிற்கு மேல் கடன்கொடுத்துள்ளதாக அறிகின்றோம் நாங்கள் மக்களை இவ்வாறான அமைப்புகள் மூலம் கடன்களை பெறுமாறு ஊக்குவிக்கின்றோம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவிக்கின்றார்.
செவ்வாய்க்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அதிக வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் சட்டவிரோத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போதுமான அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்யப்படாத நிறுவனங்களை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தி வருவதாக தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்கதற்போது இந்தப் பகுதியில் வணிகம் செய்வதற்கு வணிகப் பதிவு ஆவணம் இல்லாத நிறுவனங்களில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். நீர்கொழும்பு போன்ற இடங்களைச் சேர்ந்த தனிநபர்கள் தங்கள் வீடுகளில் நேரடியாக மக்களை அணுகி எந்தப் பதிவும் இல்லாமல் கடன் வழங்கும் சம்பவங்கள் நடந்துள்ளனஎன அவர் தெரிவித்தார்
பதிவுசெய்யப்பட்ட நுண்நிதி நிறுவனங்கள் கூட கடன்களை நிறுவனத்தின் அந்தந்த கிளையில் செயல்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தபோதிலும் பயனாளிகளின் வீடுகளில் கடன் வழங்கும்போது விதிமுறைகளை மீறியதாக என அவர் தெரிவித்தார்
