வெனிசுலா ஜனாதிபதியை அமெரிக்காவின் டெல்டா போர்ஸ் படைப்பிரிவே கைதுசெய்தது என பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரிகள் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ்தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாடியைக் கொன்ற 2019-ஆம் ஆண்டு நடவடிக்கையிலும் இந்த எலைட் ராணுவ டெல்டா ஃபோர்ஸ் தான் ஈடுபட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நியுயோர்க் டைம்சிற்கு வழங்கிய சில நிமிட பேட்டியில் டிரம்ப் வெனிசுலா ஜனாதிபதியை கைதுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை மிகத்திறமையானது என பாராட்டியுள்ளார்.
நிறையதிட்டமிடல்கள்இமிகச்சிறந்த திறமையான படையினர் நபர்கள் இது உண்மையிலேயே மிகச்சிறந்த நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸின் அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துள்ளார்
