வெனிசுலா தலைநகர் காரகாஸிலிருந்து அமெரிக்கப் படைகளால் கைதுசெய்யப்பட்டு தற்போது அமெரிக்கக் காவலில் இருக்கும் வெனிசுலா ஜனாதிபதி அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை “உடனடியாக” விடுவிக்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
“ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்இ வெனிசுலா அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளை நிறுத்த வேண்டும் மற்றும் இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் தீர்க்க வேண்டும் என்று சீனா வலியுறுத்துகிறது” என்று பெய்ஜிங்கின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக “ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது அமெரிக்கா அப்பட்டமாகப் பலத்தைப் பிரயோகித்ததைக் கண்டு சீனா கடும் அதிர்ச்சியடைவதோடு அதை வன்மையாகக் கண்டிக்கிறது” என்றும் பெய்ஜிங் கூறியிருந்தது.
