வடக்குகிழக்கு மாகாணங்களில் முறையற்ற வகையில் புதுப்பித்தக்க சக்தி வளங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன இந்த திட்டங்களின் பின்னணியில் இரண்டு முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் முறையற்ற வகையில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர் இந்த விலைமனுக்கோரலில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு அதற்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில் அதேவிலைமனுக்களை அரசாங்கம் தமது சகாக்களுக்கு வழங்கியுள்ளது.
வடக்குகிழக்கு மாகாணங்களில் முறையற்ற வகையில் புதுப்பித்தக்க சக்தி வளதிட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
இதற்கு பிரபல்யமான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர் முன்னிலையில் உள்ளனர்.இவர்கள் ஜனாதிபதியின் புகழ்பாடி திரிகின்றனர்.
