லசந்த விக்ரமதுங்க:
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய அரசியல்வாதியான பண்டாரநாயக்கவின் நெருங்கிய நண்பர்.
-
மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்.
-
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல்வாதியான ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பர்; மகிந்தவிற்கு எதிராக ரணிலை ஆட்சிக்கு கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்.
இவ்வளவு பலமான தனிப்பட்ட மற்றும் அரசியல் தொடர்புகளைக் கொண்டிருந்த லசந்த, தனது நெருங்கிய நண்பரின் ஆட்சியின் போதே கொல்லப்பட்டார்.
அதன்பிறகு, அவரை அதிகாரத்திற்குக் கொண்டு வரப் போராடிய அவரது நண்பர் ரணில், நாட்டின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் ஆகிறார். நண்பர் எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், இறுதியில் ரணில் கொலையாளிகளின் பக்கமே நிற்கிறார். ரணிலின் ஆட்சிக் காலத்தில் பல சக்திவாய்ந்த அமைச்சுப் பதவிகளை வகித்த மற்றொரு நண்பரான ரவி கருணாநாயக்க, ஒவ்வொரு ஆண்டும் மயானத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்துகிறார்; ஆனால் தனது ஆட்சிக் காலத்தில் நீதியை நிலைநாட்டப் போராடாமல், இப்போது நாடாளுமன்றத்தில் பொய் சொல்வதாக மாலிம (திசைக்காட்டி) அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறார்.
இவ்வளவு சக்திவாய்ந்த தொடர்புகளைக் கொண்டிருந்த லசந்த விக்ரமதுங்கவிற்கே இந்த நிலை என்றால், பிரகீத் எக்னலிகொட, நிமலராஜன் மயில்வாகனம், தர்மரத்தினம் சிவராம் ஆகியோரின் கொலைகளுக்கு எப்போதாவது நீதி கிடைக்குமா? பொத்தல ஜயந்தவுக்கு நீதி கிடைக்குமா? கீத் நோயருக்கு நீதி கிடைக்குமா? லசந்தவின் கொலையாளிகளை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட அந்த அவமானகரமான ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுமா? உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எப்போதாவது நீதி கிடைக்குமா?
உண்மையில், யார் ஆட்சிக்கு வந்தாலும், “நீதி” என்பது ஒரு மாயைதானே?
– சரோஜ் பத்திரண
