வெலிகம பிரதேச சபை தலைவர் கொல்லப்பட்ட பின்னர் அரசாங்கம் தெரிவித்துள்ள கருத்துக்கள் குற்றவாளி என குற்றம்சாட்டப்படும் ஒருவரை கொலை செய்யலாம் என்பது போல அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் சண்டேடைம்சிற்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
கொல்லப்பட்ட ஒருவரை பற்றி அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லலாம்.நான் நாளை கொல்லப்பட்டால் என்னை பற்றியும் எதுவும் சொல்லலாம்.அவர்கள் நாட்டை ஆபத்தான திசையில் கொண்டு செல்கின்றனர்.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பளிக்குமாறு நாங்கள் விடுத்தவேண்டுகோள்களிற்கு அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த கொலைக்கு முன்னரே நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.ஆனால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எங்கள் வேண்டுகோளை நிராகரித்தார்.
பெருமளவு பாதுகாப்புடன் நடமாடும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பிற்கான எங்களின் கோரிக்கையை நிராகரிக்கின்றார்.