ஐவிஎஸின் சேவைகள் முடிவிற்கு வருகின்றன – கடவுச்சீட்டுவிசாக்களை இந்திய தூதரகமே நேரடியாக கையாளும்

விசா கடவுச்சீட்டு மற்றும் தூதரக சேவைகளுக்கான அவுட்சோர்சிங் சேவை வழங்குநரான ஐவிஎஸ்லங்கா அக்டோபர் 31 2025 அன்று செயல்பாடுகளை நிறுத்துவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி நவம்பர் 3 2025 முதல் விசா கடவுச்சீட்டுமற்றும் தூதரகம் தொடர்பான அனைத்து சேவைகளும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் (கொழும்பு) உதவி உயர் ஸ்தானிகராலயம் (கண்டி) மற்றும் இந்திய துணைத் தூதரகம் (யாழ்ப்பாணம்) ஆகியவற்றால் நேரடியாகக் கையாளப்படும்.

விண்ணப்பதாரர்களுக்காக ஒரு புதிய நியமன மேலாண்மை அமைப்பு அமைக்கப்பட்டு வருவதாகவும் மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதலுக்காக விண்ணப்பதாரர்கள்  (https://www.hcicolombo.gov.in) ஐப் பார்வையிடவும் அல்லது கொழும்பு கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அந்தந்த அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளவும் உயர் ஸ்தானிகராலயம் அறிவுறுத்தியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்