சேத மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல்,சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 500,000 அரசு வழங்கும்-அமைச்சர் ஆனந்த விஜேபால

பேரழிவுச் சூழலால் வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக, தனிப்பட்ட சேத மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல், ஒரு வீட்டிற்கு ரூ. 500,000 வீதம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக  அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

“பிரஜா சக்தி” (Praja Shakthi) முன்முயற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், முறையான சுற்றறிக்கைகள் வெளியிடப்படுவதற்கு முன்பே ஆரம்பகட்ட நிதி உதவி வழங்கப்பட்டதாக அமைச்சர் விளக்கினார்.

பகுதியளவில் சேதமடைந்த 120,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு சுமார் ஒரு வருடம் காலம் எடுக்கும் என்றும், இது நிவாரணம் வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எனவே, சரியான நேரத்தில் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மதிப்பீடு ஏதுமின்றி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 500,000 நிலையான தொகையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது,” என்று அமைச்சர் கூறினார்.

இருப்பினும், முறையான சேத மதிப்பீட்டை மேற்கொள்ள விரும்பும் குடும்பங்கள் இந்த நிலையான கொடுப்பனவைத் தவிர்க்கலாம் என்றும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் மதிப்பீடு செய்யப்பட்ட சேத மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“மதிப்பீடு செய்யப்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ. 2.5 மில்லியன் அல்லது ரூ. 5 மில்லியனாக இருந்தாலும், அதற்கேற்ப முழு மதிப்பீட்டுத் தொகையையும் அரசாங்கம் வழங்கும்,” என அவர் மேலும் கூறினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு