வெனிசுலா அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியது; மக்களைவீதியில் இறங்குமாறு அழைப்பு

சனிக்கிழமை அதிகாலை அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, வெனிசுலா அரசாங்கம் தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கிப் போராடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அரசாங்கத்தின் அறிக்கையில், “மக்களே வீதிக்கு வாருங்கள்! நாட்டின் அனைத்து சமூக மற்றும் அரசியல் சக்திகளும் ஒன்றுதிரண்டு, இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலைக் கண்டித்து போராட்டங்களை முன்னெடுக்குமாறு பொலிவேரியன் அரசாங்கம் (Bolivarian Government) கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,  ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ “அனைத்து தேசிய பாதுகாப்புத் திட்டங்களையும் செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்” என்றும், “வெளிப்புற இடையூறுகளுக்கான அவசர நிலையை” (state of external disturbance) பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அவசர நிலை பிரகடனம், மக்களின் உரிமைகளை நிறுத்தி வைக்கவும், ஆயுதப் படைகளின் அதிகாரத்தை விரிவுபடுத்தவும்  அதிகாரம் அளிக்கிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு