திருகோணமலையில் வியாழக்கிழமை காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது.
இதனால் கடல்அலைகள் சீற்றத்துடன் வீசுவதை அவதானிக்க முடிந்தது.மீனவர்கள் கடலிற்கு செல்வுத குறித்து அவதானமாகயிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலிற்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
